Headlines

தெஹிவளையில் வீடு எரிந்து நான்கு பேர் வபாத்




தெஹிவளை கவ்தான வீதியில் உள்ள முஸ்லிம் வீடொன்றில் இன்று (16) அதிகாலை தீப்பிடித்ததில் அவ்வீட்டில் இருந்த தாய் இரு மகள்கள் மற்றும் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்ற போதும், காலையிலேயே மற்றவர்களுக்கு தெரிய வந்து பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட குடும்பம் ஓட்டமாவடி அல்லது வெலிகம பிரதேசத்தை  சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கபட்டாலும் இது கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *