Headlines

இலங்கைத் தமிழ் பெண் தீயில் எரிந்து சாவு




திருவண்ணாமலை வந்தவாசி பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீ மூட்டித்  தற்கொலை செய்துள்ளார். என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த முகாமில் வசித்து வந்த பரமேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
குறித்த பெண்ணுக்கும் விழுப்புரம் கீழ்புதுப்பட்டு அகதி முகாமைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்து தனது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்தப்பெண் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிக்கொண்டுள்ளார்.

தீயை அணைத்து அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கீழ்கொடுங்கலூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *