Headlines

தவறிழைத்தோர் தனது குடும்பப் பெயரைக் கூறித் தப்பிக்க முயற்சி –




கடந்த காலங்களில் தவறிழைத்த பிரிவினர் தமது குடும்பத்தினரின் பெயரைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தினர் மீது தற்போது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அவன்கார்ட் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்திவிட்டு அதிலிருந்து தப்பிச்செல்ல குற்றமிழைத்த குழுவினர் முயற்சி செய்து வருவதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *