Headlines

வசிம் தாஜூதீனின் கொலை வழக்கு தீர்ப்பு இன்று அறிவிக்கப் படாது

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பாக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை விசாரணை செய்யுமாறு, நீதிமன்றம் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை பணித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகத்துக்கிடமாகவுள்ள இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வாசக்கின் தீர்ப்பு இன்று…

Read More

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் பொதுக்கூட்டம்: அதிதியாக அமைச்சர் றிஷாத்

ஐக்கிய மலாய தேசிய அமைப்பின் (UMNO) வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (10) மலேசியா, கோலாலம்பூர், பியூட்றா உலக வர்த்தக நிலையத்தில் ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் இந்நிகழ்வில் அதிதியாக பங்கேற்றார். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஜமீலும் கலந்துகொண்டார். உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும், பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Read More

தவறிழைத்தோர் தனது குடும்பப் பெயரைக் கூறித் தப்பிக்க முயற்சி –

கடந்த காலங்களில் தவறிழைத்த பிரிவினர் தமது குடும்பத்தினரின் பெயரைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்துவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ச குடும்பத்தினர் மீது தற்போது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக அவன்கார்ட் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும்…

Read More

இது சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் – ஞானசார தேரர்

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின்…

Read More

ரயிலில் மோதுண்டு கரடி பலி

முல்லைத்தீவு – பழைய முறிகண்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு கரடியொன்று பலியாகியுள்ளது, இந்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளும் ரயிலுடன் மோதுண்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில், நேற்று இரவு இந்த கரடி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு வன விலங்குகள் தொடர்ந்தும் பலியாகி வருகின்றமை தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கினறனர். அருகிவரும் கரடி இனத்தை சார்ந்த…

Read More

குவைத்தில் நிர்க்கதியான பணிப்பெண்கள் 83 பேர் நாடு திரும்பினர்!

குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் நேற்று(9) நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 83 பேர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் குவைத் நாட்டிற்கு பணிப் பெண்களாக சென்று அங்கு பல்வேறு இன்னல்களையும் எதிர்நோக்கிய நிலையில், அந்த நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் தங்கியிருந்த குழுவினரே…

Read More

சீருடை வவுச்சர்! ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை சீருடைக்குப் பதிலாக வழங்கப்பட்டுள்ள பண வவுச்சர் முறைமையை நீக்கிவிடுமாறு தெரிவித்து ஆசிரியர், அதிபர் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு முன்னணி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், பொது ஆசிரியர் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், முதலாம் தர அதிபர்களின் சங்கம் மற்றும் அதிபர் சேவை…

Read More

இலங்கை – மாலைதீவிற்கு இடையிலான உறவு விருத்தி குறித்து பேச்சு

இலங்கையுடன் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள ராஜதந்திர முறுகலை தீர்த்துக்கொள்ளும் வகையில் உயர்மட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. மாலைதீவின் வெளியுறவு அமைச்சர் தஹன்யா மயூமூன் நேற்று (9) இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து உரையாடியுள்ளார். முன்னதாக அவர் கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார். இந்தநிலையில் குறித்த சந்திப்புக்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று மாலைத்தீவு அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மாலைத்தீவில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவர் உட்பட்ட இரண்டு இலங்கையர்கள்…

Read More

தாஜுதீன் தீர்ப்பு இன்று..

யோஷித்த ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான CSN தொலைக்காட்சியில் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய, அவரது முன்னாள் காதலி என அறியப்படும் யஷாரா அபேநாயக்கா நிதி மோசடி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை அளித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினமே குறுஞ்செய்தியொன்றின் (SMS) மூலம் யஷாரா நடந்த விடயங்களை நாமல் ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளார். நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவில் தான் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்ததாகவும், அவர்கள் CSN பணிப்பாளர்களை விசாரணைக்கு அழைப்பார்கள் என்றும், அனைவருக்கும் உள்ளே செல்வதற்கு தயாராக இருக்கும்படியும்…

Read More

(ஹோமாகம) பாடசாலை உட்கட்டமைப்பை பார்வை

ஹோமாகமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலையின் அமைப்புப் பணிகளை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சென்றார். அமைச்சராக இருந்தபோது பந்துல குணவர்தன அவர்கள் இந்த பாடசாலையினை இங்கு உருவாக்கினார்.இந்த பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறியவருமாறு,இவ்வாறான அமைப்பு ரீதியான பாடசாலைகளை கிராமப் புறங்களிலும் உருவாக்குவதன் அவசியத்தை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது விளக்கமளித்தார்.

Read More

சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி!

கொழும்பு – கிரான்பாஸ், மாதம்பிடிய பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 57 வயதுடைய பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More