Headlines

மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளனர்: மஹிந்த




மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேகமாக வாழ்க்கை செலவு உயர்கின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணித்து செயற்படுவதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹராமை, மஹேன்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்த வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சில அமைச்சர்கள் கூறுவதனை போன்று அரசாங்கம் கவிழ்வதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *