Headlines

நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்: ஜனாதிபதி தலைமை




அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதே இந்த சந்திப்பில் நோக்கமாகும்.

தங்கள் கட்சிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *