Headlines

அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை




அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும்.

எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது.

அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய ஏனைய விபரங்களை உள்விவகார அமைச்சு இன்னமும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *