Headlines

நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது : சம்பந்தன்




நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் திணைக்களம் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *