Headlines

நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது : சம்பந்தன்

நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க…

Read More

சிக­ரட்டின் விலையை 45 ரூபா­வாக அதி­க­ரிக்க திட்டம்

நாட்டின் சிகரட் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­குடன் சிக­ரட்டின் வரி அற­வீட்டு முறை­மையில் திருத்தம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­க­மைய அடுத்த வரு­டத்­திற்­கான வரவு செலவு திட்­டத்தின் மூல­மாக சிகரட் விலையை 45 ரூபா­வாக அதி­க­ரிக்­க­வுள்­ள­தாக அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சம­ர­சிங்க தெரி­வித்தார். இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் யோசனை முன்­வைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் இது­வரை காலப்­ப­கு­தியில் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­களில் 70 ஆயிரம் பேர் சிக­ரெட்­டிற்கு அடி­மை­யா­கி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இது தொடர்பில்…

Read More

மைத்திரியின் நல்லிணக்க முயற்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு

இலங்­கையில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தல் மற்றும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டுதல் போன்­றன தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மேற் கொண்­டு­ வரும் நட­வ­டிக்­கை­களை பாராட்­டு­வ­தா­கவும் அவை வர­வேற்­கப்­பட வேண்­டி­யவை எனவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்­துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே அமெ­ரிக்க ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் பான் கீ மூன் அரச தலை­வர்­க­ளுக்கு…

Read More

வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்துக்கு ‘செக்’ வைத்த அமைச்சர்

வௌிநாட்டுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத, வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் நீடிக்கப்படாது என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வௌிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களால் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத சில வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பற்றி முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மரண பயம் வந்துவிட்டது…..

எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் படுகொலை  உள்ளிட்ட கடந்த சில நாட்களாக இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டிவிட்டன. இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு…

Read More

முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம்; அமைச்சர் ஹலீம் தீவிர முயற்சி

பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீம் முன்னெடுத்து வருகின்றார் என அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகைகளுக்காக தினமும் நேரம் தவறாமல் தியாக மனப்பாங்குடன் அதான் (பாங்கு) சொல்வதுடன் பள்ளிவாசல்களின் பரிபாலன விடயங்களிலும் முன்னின்று உழைக்கின்ற முஅத்தின்மார்களின் நலன்கள்…

Read More

உலமாக்கிடையே விட்டுக்கொடுப்பு இல்லாமல் போய்விட்டது – கோவை அய்யூப்

– டீன் பைரூஸ் – காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டினில் எதிர்வரும் 02.10.2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம் பெறவுள்ள ‘மாமறைக்கு ஓரு மாநாடு’ தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று அதர் மஸ்ஜிதின் தலைவர் சகோதரர் எம்.றவுப் தலைமையில் 29.09.2015 செவ்வாய் இஷா தொழுகையின் பின்னர் தாருல் அதர் மஸ்ஜிதில் இடம் பெற்றது. மேற்படி ஊடக சந்திப்பின் போது தாருல் அதர் மஸ்ஜிதின் தலைமை இமாம் பீ.எம்.அஸ்பர் (பலாஹி) பிரபல தென்னிந்தி மார்க்க பேச்சாளர் கோவை…

Read More

சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் ; 300 ஆண்டுகள் கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார். கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உதயன்…

Read More