Headlines

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட பலர் விபத்தில் பலி




மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஐவர் இதுவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *