Headlines

எனக்கு ஆதரவு வழங்கிய மக்களை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் -இஸ்மாயில்

????????????????????????????????????




திகாமடுல்ல மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட தனக்கும், தனது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்றுமுன்தினம்(19) தனது அலுவலகத்தில ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் சம்மாந்துறைத் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளராக களமிறங்கிய எனக்கு மக்கள் வழங்கிய ஆதரவினையிட்டு சந்தோசமடைகின்றேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் முதன்முறையாக தனித்து போட்டியிட்டு 33ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை மக்கள் வழங்கி மாவட்டத்தில் எமது கட்சிக்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளனர். அதேநேரம் சம்மாந்துறைத்தொகுதியில் தன்னைத் தோற்கடிக்கும் சதித்திட்டங்களையும் முறியடித்து எமது கட்சிக்கு 14ஆயிரத்து 33 வாக்குகளை அளித்தமைக்காக எனது மனமுகர்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு ஆதரவு வழங்கிய மக்களை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன். என்னால் முடியுமான சேவைகளை இனிவரும் காலங்களில் மக்களுக்கான வழங்கவுள்ளளேன். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *