Headlines

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியது மிகப் பெரிய துரோகம்




ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமானது, அண்மையில் செய்த மிகப் பெரிய துரோகம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரதம செயலாளர் டில்வில் சில்வா இதனைக் கூறியுள்ளார்.

ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களின் நோக்கம் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பது மட்டுமே என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூட்டமைப்பு சார்பில் வேட்பு மனுவை வழங்கியதன் மூலம் அந்த வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-AD-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *