Headlines

புத்தளம் மதரஸதுல் நபவியாவுக்கு இலத்திரனியில் சாதனங்கள் மற்றும் கதிரைகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் அல் மதரஸதுல் நபவியாவுக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், ஸ்மார்ட் TV (LED) மற்றும் சவுண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே மேற்படி உபகரணங்கள், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வின், விசேட அதிதியாக வைத்தியர் திருமதி.திபாயா பங்கேற்றிருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான…

Read More

முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “சிறந்த மேடைப் பேச்சாளரும் சமூகப்பற்றுள்ளவருமான அப்துல் மஜீத், மக்களுடன் அன்பாகக் பழகக்கூடிய மனிதநேயம் கொண்டவர். இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அவர், மக்களின் தேவையறிந்து துணிச்சலுடன் கருமமாற்றியவர். கட்சி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதித்து, மக்கள் பணியாற்றியவர். அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது…

Read More

“தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தமிழர் – முஸ்லிம் தரப்பினர் ஒரே மேடையில் இருந்து பேச வேண்டும்”

மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது. எமது நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள், பல தசாப்தங்களாக தேங்கிக் கிடக்கிறது. அவற்றுக்கு ஒரு தீர்வுப் பொறி முன்வைக்கப்பட வேண்டுமென்றால், அரசாங்கத்துடன் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒரே மேசையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட…

Read More

VIDEO- சுகாதார அமைச்சரின் பதிலில் எமக்கு திருப்தி இல்லை’- தலைவர் ரிஷாட்!

சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும்; கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் கூறியதாவது, “எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். இதை விடுத்து, எம்.பிக்களின் கல்வித்தகைமைகளை…

Read More

VIDEO- மாகாண சபையின் முழுமையான அதிகாரங்கள் கிடைப்பது பிராந்தியத்துக்கான வரப்பிரசாதமாகும் – தாஹிர் MP!

மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து, அம்பாறை, நிந்தவூரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “ஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மாகாண சபையானது, மக்களுக்கான பணிகளை செய்வதற்கும், மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்காக…

Read More

தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில் கும்பலங்கை ஹமீதியா பாடசாலைக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னை அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான முஸம்மிலின் வழிக்காட்டலின் கீழ், அல்ஹாஜ் மொய்னுதீனின் வேண்டுகோளின் பேரில், இப்/கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான அஷார்தீன் மொய்னுதீனினால், போட்டோகொப்பி இயந்திரம், பிரின்டர் இயந்திரம் மற்றும் Amp, Mic உள்ளிட்ட குறித்த இலத்திரனியல் உபகரணங்கள்,…

Read More

VIDEO: புதிய சபாநாயகருக்கு தலைவர் ரிஷாட் வாழ்த்து!

10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது, “புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்; அதேபோன்று, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தின் சபாநாயகராக…

Read More

VIDEO: பாராளுமன்ற உறுப்பினராக முத்து முஹம்மட் பதவிப்பிரமாணம்!

புதிய பாராளுமன்ற உறுப்பினராக இஸ்மாயில் முஹம்மட் முத்து முஹம்மட் அவர்கள், பிரதி சபாநயகர் முன்னிலையில், இன்று காலை (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முஹம்மட் அவர்கள், இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

VIDEO- “தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்”

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் பிரதித் தவிசாளர் M.I.முத்து முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், தனக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க காரணமாக இருந்த, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Read More

தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில் புத்தளம் ஸாஹிராவுக்கு ஸ்மார்ட் TV வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் 5ஆம் வட்டார அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு ஸ்மார்ட் TV (HD) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தினால், பாடசாலை அதிபர் S.R.M.M.முஹ்ஸி அவர்களிடம் ஸ்மார்ட் TV கையளிக்கப்பட்டது. இதன்போது, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் இஹ்திஸாம் மற்றும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

Read More

தலைவர் ரிஷாட் – மயோன் சமூக சேவை அமைப்புக்கும் இடையிலான சந்திப்பு!

அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக்கொண்டு, மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்டீன் அமைப்பின்…

Read More

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக M.I.முத்து முஹம்மது நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் பிரதித் தவிசாளர் மொஹமட் இஸ்மாயில் முத்து முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாக காணப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பதவிக்கு இன்று (12) நால்வரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்களின் பெயர்களும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய…

Read More