Headlines

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சந்திப்பு!

இன்றைய தினம் (16) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முள்ளியவளை, ஹிஜ்ராபுரம் மற்றும் நீராவிப்பிட்டி பிரதேச வாழ் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மீராவோடை, அமீர் அலி வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (16) மீராவோடை, அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார். இங்கு கருத்து தெரிவித்த அவர், “மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விழா நிகழ்வுகள், பாடசாலையின்…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (16) மதியம் 2.30 மணியளவில், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த…

Read More

மன்னார் மாவட்டத்தின் 2024ஆம் ஆண்டிற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 9.30 மணிக்கு, மன்னார் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த அபிவிருத்தி குழுக்…

Read More