Headlines

சுமந்திரனின் தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்திய தலைவர் ரிஷாட் மற்றும் தவிசாளர் அமீர் அலி!

பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில், அவருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று (27) சுமந்திரன் எம்.பியின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார். இந்நிலையில், இன்று (28) மாலை தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரன் எம்.பியின் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள்,…

Read More

முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, 90 ஏக்கர், அல் – ஹஸனாத் பாலர் பாடசாலையின் விடுகைவிழா சிறப்பாக இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (23) 90 ஏக்கர், அல் ஹஸ்பான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், முன்பள்ளி வலய இணைப்பாளர் ஜௌசிரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் கட்சியின் முதளைப்பாளி அமைப்பாளர் தௌபீக்,…

Read More

புத்தளம், முதளைப்பாளி, அல்-மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

புத்தளம், முதளைப்பாளி, அல் – மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகைவிழா, இன்று  வெள்ளிக்கிழமை (23) முதளைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் Z.A.தௌபீக் தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். மேலும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் M.T.M.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர் மற்றும் மௌலவி…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் புத்தளம் விஜயம்!

புத்தளம், திகழி பிரதேசத்திற்கு இன்று (23) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தாஹிரின் இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்ககள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

VIDEO-‘முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் விசனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நிலையில் காணப்பட்டாலும் என்றாவது ஒருநாள் மீள் எழுச்சிபெறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றார்கள். ஆனாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கில் செயற்படுவதை சுட்டிக்காட்ட வேண்டிய…

Read More

UTV கிராத் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா!

நாடளாவிய ரீதியில், UTV நடாத்திய கிராத் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை (17) மூதூர், ஸஹ்ரா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றினார். இதன்போது, மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், அரசியல் அதிகார சபை உறுப்பினர் Dr. ஹில்மி மொஹிடீன், மூதூர் பிரதேச…

Read More

புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலை விடுகை விழா!

வவுனியா, புதிய சாளம்பைக்குளம், றவ்ழத்துள் ஜன்னா பாலர் பாடசாலையின் விடுகை விழா இன்று (17) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இதன்போது, கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முகம்மட் ஆசிரியர், வவுனியா மாவட்ட உலமா சபைத் தலைவர் ஜுனைட் மௌலவி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றஹீம், விவாகப் பதிவாளர் ஜவாஹிர் மற்றும்…

Read More

வவுனியா, பட்டகாடு ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனான சந்திப்பு!

வவுனியா, பட்டகாடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (17) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சாளம்பைக்குளம் அல்/அக்ஸா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இன்றையதினம் (17) வவுனியா மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், சாளம்பைக்குளம், அல் – அக்ஸா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முகம்மட் ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Read More

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சந்திப்பு!

இன்றைய தினம் (16) முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முள்ளியவளை, ஹிஜ்ராபுரம் மற்றும் நீராவிப்பிட்டி பிரதேச வாழ் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மீராவோடை, அமீர் அலி வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (16) மீராவோடை, அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார். இங்கு கருத்து தெரிவித்த அவர், “மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விழா நிகழ்வுகள், பாடசாலையின்…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (16) மதியம் 2.30 மணியளவில், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. உமா மகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த…

Read More