Headlines

சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு-15 இல் அமைந்துள்ள ‘சத்திரு செவன’ அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்று, பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கான பரிசளிப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பாயிஸ்…

Read More

பாயிஸ் ஞாபகார்த்த கரப்பந்து சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!

76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்லிதரின் இளைஞர் கழகம் நடாத்திய பாயிஸ் ஞாபகார்த்த கரப்பந்து சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பாயிஸ் அறக்கட்டளையின் தலைவருமான மொஹமட் பஹத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Read More

“சமூக செயற்பாடுகளை புறக்கணிக்கும் போக்குகள் சுதந்திரமாக பொருள்படாது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டின் சுதந்திரம் முழு சமூகங்களதும் உரிமைகளுக்கு அடையாளமாகத் திகழ வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சகல சமூகங்களதும் உரிமைகளை அங்கீகரித்துத்தான் பிரித்தானியர் நாட்டுக்கு சுதந்திரம் வழங்கினர். இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க தலைவர்கள் ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இதனால், எதிர்கொண்ட இன்னல்களுக்கு சகல…

Read More