Headlines

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம்!

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “கௌரவ முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான எனது உறவினரும் நெருங்கிய நண்பருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்ட செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது தந்தை வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்ட நண்பர்…

Read More

“நஜீப் ஏ.மஜீதின் முன்மாதிரிகள் நாகரீக அரசியலுக்கே அடித்தளம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

நாடறிந்த அரசியல்வாதியும் முதலாவது முஸ்லிம் முதலமைச்சருமான நஜீப் ஏ.மஜீத் அவர்களின் மறைவு நாகரீக அரசியலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாகரீக அரசியலின் நாயகன் மர்ஹும் நஜீப் ஏ.மஜீத். சிறந்த அரசியல் புலத்தில் புடம்போடப்பட்ட அவரிடம் ஆழ்ந்த அனுபவங்கள் இருந்தன. தந்தை அப்துல் மஜீதின் பாசறையே அவரது ஆளுமைகளை முழுமைப்படுத்தியது. அவரது தந்தையார் மூதூர் தொகுதியின்…

Read More

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை நேற்று (05) ஐ.நா தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பலஸ்தீனின்…

Read More

மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினராக பஹத் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரபீடக் கூட்டம், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையி்ல், கடந்த 15ஆம் திகதி அன்று, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் பாயிஸ் அவர்களின் மருமகன் பஹத் கட்சியின் உயர்பீட உறுப்பினராக (High Command Member) நியமிக்கப்பட்டார். அதன்பிற்பாடு, நேற்றைய தினம் (04) கட்சித் தலைமையகத்தில், தலைவர் ரிஷாட் பதியுதீனை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்….

Read More

‘காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

எதேச்சாதிகாரத்தில் நடந்துகொள்ளும் இஸ்ரேலின் போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், காஸாவை கைப்பற்றும் திட்டங்களை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “சமாதான உடன்படிக்கையை மீறியுள்ள இஸ்ரேல் மீண்டும் கொலைகாரன்போல் செயற்படத் தொடங்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவிகளைக் கொன்று குவித்து, காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் யூத அரசின் போக்குகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கே ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலக…

Read More

Video- “கைத்தொழில் முயற்சிகளை முன்னேற்ற முறையான திட்டம் தேவை” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கைவிடப்பட்டு வரும் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு கொரியா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வர்த்தக வாணிபம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (01) சபையில் உரைநிகழ்த்திய அவர் கூறியதாவது, “அந்நியச்செலாவணியை அதிகம் ஈட்டும் துறைகளில் கைத்தொழில்துறை பிரதானமானது. அரசு அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளால், சிறிய மற்றும்…

Read More

Video- “தமிழர்கள், முஸ்லிம்கள் என்பதாலா கிழக்கு மாகாண சதொச ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்?” –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கேள்வி! கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது…

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் – தவிசாளர் அமீர் அலி!

இன்று வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சகல பாடங்களிலும் அதி விஷேட (A) சித்திகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் மற்றும் உயர்தரத்தில் கற்பதற்கான தகுதியை பெற்றுக்கொண்ட மாணவர்களையும் மன மகிழ்வுடன் வாழ்த்துவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான M.S.S.அமீர் அலி தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தள்ளதாவது, “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவன் வாக்கிற்கொப்ப, எமது மாணவச்…

Read More

காலநிலை மாற்றங்களுக்கான ஐ.நா சர்வதேச மாநாட்டில் இளைஞர்களின் பிரதிநிதியாக ஹஸீப் மரிக்கார்!

காலநிலை மாற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 28ஆவது மாநாடு (COP28) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இலங்கை நாட்டு இளைஞர்களின் பிரதிநிதியாக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொள்கிறார். மேலும், இந்த மாநாட்டில் பல்வேறுபட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், சுற்றாடற்றுறை…

Read More