Headlines

(Video)சம்மாந்துறை, மன்னார் வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்திக்குமாறு சுகாதார அமைச்சரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

“சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 2017ஆம் ஆண்டிலிருந்து கணக்காளர் இல்லாமல் இயங்கி வருகிறது. உடனடியாக அந்த வெற்றிடத்தை நிரப்ப சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் வேண்டுகோள் விடுத்தார். இன்று வியாழக்கிழமை (30) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “எனது ஊரான மன்னார், தராபுரம் கிராமத்திலிருக்கும் வைத்தியசாலைக்கே கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அந்த வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் அண்மையில் இராஜினாமா செய்துவிட்டு அவுஸ்திரேலியா சென்றுவிட்டார். அவருக்கு…

Read More

Video- ‘நஷ்டத்தில் இயங்கும் வன்னி மாவட்ட டிப்போக்களை சீரமைத்து, போக்குவரத்துக்கு வழி செய்யுங்கள்’ –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! இலாபத்தில் இயங்கிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பஸ் டிபோக்கள் தற்பொழுது நஷ்டத்தில் இயங்குவதற்கான உரிய காரணத்தைக் கண்டறியுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை (29) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “வன்னி மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லையென்று டிப்போ நிர்வாகிகள் கூறுகின்றனர். நாம்…

Read More

“பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கனவான் உடன்படிக்கைகளை மீறி செயற்படும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் நயீமுல்லாஹ்”

மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் அன்ஸிலின் விஷேட ஊடக அறிக்கை! சகோதரர் நயிமுல்லா மஸீஹுத்தீன் அவர்களே..! புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கனவான் உடன்படிக்கைகளை மீறி செயற்படும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சகோதரர் நயீமுல்லாஹ் ஆகிய தங்களின் நடவடிக்கைகள் பற்றி எமது கட்சி கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்தமைக்கு பதிலளிக்கும் வகையில், தங்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கை தொடர்பில் அகில…

Read More

விஷேட செய்தியாளர் மாநாடு!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவது தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (16) கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் சுபைர்தீன், சட்டவாக்கப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். Video Link : https://fb.watch/omX06Z7ORM/

Read More

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – VIDEO

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு…

Read More

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி நிற்கும் இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!

The letter signed by 159 Parliamentarians to the United Nations with regard to the Palestine issue was handed over to the United Nations Office at the UN Headquarters today 14th November at 11.00 am after which a copy of the same was delivered to the Palestinian Ambassador in Colombo. காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய…

Read More

“முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருகிறது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மன்னார், மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலீபா மரைக்கார் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “மர்ஹூம் இக்பால் ஹாஜியார் அவர்கள் முசலி பிரதேச சபையின் உறுப்பினராகவும் சமூர்த்தி அதிகாரியாகவும் இருந்து, அந்தப் பிரதேச மக்களின் நலனுக்காகப் பணிபுரிந்தவர். முசலியின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறையுடன் செயற்பட்ட அன்னார், புத்தளத்திலும் வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும்…

Read More

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம் – விசாரணையின் பின் உயர்பீடம் முடிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் மற்றும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே,…

Read More