Headlines

சட்ட முதுமாணி தலைமையில் உயரிய அரசியல் கலாச்சாரத்துக்கு மக்கள் ஆணை கோருகிறது மயில்!

நாம் எம்மை ஆள்பவர்கள் தொடர்பில் அக்கரையற்றவர்களாவே இருக்கின்றோம். யார், யாரோவெல்லாம் எம்மை ஆள்கின்றனர். சற்றேனும் சிந்திப்பதில்லை. எப்படி எம் சந்ததிகள் சீரிய பாதையில் பயணிப்பது. எம் சந்ததிக்கு நேரிய அரசியல் பாதையை தான் காட்டுகிறோமா? இவைகள் பற்றி இனியாவது சிந்தித்தேயாக வேண்டும். நாம் எதிர்காலத்தில் மிகப் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளோம். எமது என்ன உரிமையில் கை வைக்கப்படும் என அறியாதவர்களாகவும், அதற்கு எப்படி காய் நகர்த்தப்படும் என்றெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையுடையவர்களாகவும் இருக்கின்றோம். அதற்கு…

Read More

‘இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்’ – பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபா கொடுப்பனவினை, அம்மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனத்தினை செலுத்தி, அதனை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றினால் நாட்டில் நிர்வாக முடக்கல் ஏற்பட்டதினால் மக்கள் பெறும்  சிரமங்களை எதிர்கொண்டனர்….

Read More

“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள்…

Read More

‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார். அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அமரர் ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முறையான திட்டங்கள் தீட்டியவர். 1994 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர், தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி…

Read More

பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொவிட் – 19 கொரோனாவின் பீதி, நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களின் போக்கு, தொடர்ச்சியாக சுற்றிவளைக்கும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் ஒரு மாதம் நோன்பிருக்க “அல்லாஹ்” எமக்கு அருள்புரிந்தான். அல்லாஹ்வின் இந்த அருட்பார்வைகள் ஆட்சியாளர்களுக்கும் நாட்டுக்கும் கிடைக்க வேண்டுமென்பதே…

Read More

‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளங்களில் ஒன்றை இழந்துவிட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரி அவர்களது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கலாநிதி ஷூக்ரி அவர்கள் துறை போகக் கற்ற ஒரு தனி மனிதனாக வாழ்ந்து முடித்தவரல்லர். அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். ஆயிரக் கணக்கான மாணாக்கரை உருவாக்கியதில் பெரும்பங்கை வகித்தவர்….

Read More

‘பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருகிறது’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு பெருங் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் மர்ஹூம் கலாநிதி சுக்ரியின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கலாநிதி சுக்ரியின் மறைவு சமூகத்துக்கு பேரிழப்பாகும். அதுவும் தற்போது சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான இக் காலகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகும். மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில்…

Read More

“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்வைத்து, முஸ்லிம்களுக்கு நாங்கள் முடிந்தளவு அநியாயங்களை செய்துள்ளோம் என்று பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுகின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி ஆகியோர்களை இலக்குவைத்து தேர்தல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதன் தொடரில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து, முஸ்லிம்…

Read More

‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்!

வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வலி நிறைந்த வாழ்க்கையின் 30 ஆண்டுகள் மற்றும் மீள்குடியேற்றத்தின் 10 ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வெளியேற்றத்தில் அழிவடைந்த சொத்துக்களுக்கு எவ்வித நஷ்டஈடோ இதுவரை கௌரவமான மீள்குடியேற்றமோ இல்லாத நிலையில் வடக்கு முஸ்லிம்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். யுத்த காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து விடுதலைப்புலிகள் தீர்மானித்தார்கள். இப்போது வடக்கு நிர்வாகத்தினர் திட்டமிட்டு முடிவுகட்டி வருகின்றனர். நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வாக்காளர் இடாப்பு…

Read More

நம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..!

கொவிட் – 19 (கொரோனா) வைரஸினால் உயிரிழப்போரை தகனம் செய்யக் கோரும் திருத்தப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது. குறித்த இவ் வர்த்தமானி (2170/08) சுகாதார அமைச்சினால் ஏப்பிரல் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று (14) தாக்கல் செய்யப்பட்ட இதற்கெதிரான மனுவில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர். அனில் ஜாசிங்க, சுகாதார…

Read More

ஜனாஸா எரிப்புக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் ௦4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திராதேவி வன்னிஆரச்சியினால் வெளியிடப்பட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பொருளாளர் ஹுசைன் பைலா…

Read More

“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் மரணித்த உடல்களை அகற்றல்!!!  பூகோளம் முழுவதிலும் கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக…

Read More