‘அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்’ – புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!
புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்து, ஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தாந்தீவில் நேற்று (05) இடம்பெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அலி சப்ரி ரஹீம் எம்.பியின் பாராளுமன்றச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ், பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.ஜௌஸி, கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் முஹம்மட் நஸீர் ஆகியோர்…
