இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் எம்.பி முறைப்பாடு!
புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று (23) கையளித்த போதே, ஆணைக்குழு உறுப்பினர்கள் பா.உ ரிஷாட் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,…
