“பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!
அநியாயமான குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்காரின் விடயத்தில் தலையீடு செய்து, அவருக்கு நீதி பெற்றுக் கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பேருவளை, தர்கா நகரில், கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹஷீப் மரிக்காரின் விடுதலை…
