“சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது” – மூதூரில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
தற்போது சரிந்து போயுள்ள வாக்குகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்கான திட்டமுடனேயே, முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபடுத்தி, பலிக்கடாவாக்கும் முயற்சிகளில் கடும்போக்குவாதிகள் ஈடுபட்டு வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, நேற்று மாலை (25) மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “நமது சமூகத்துக்கு…
