“எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது” – முதன்மை வேட்பாளர் அமீர் அலி!
எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு, தற்கால அரசியலைப் பொறுத்தவரையில் இருக்கின்றது என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்குடா அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில், இளைஞர்களுக்கான T shirt வழங்கும் நிகழ்வு மற்றும் பிரச்சாரக் கூட்டம் வாழைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். தொடர்ந்து…
