“மொட்டுக்குக் கிடைக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!
பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால், சிறுபான்மை சமூகத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்து விடும் என்று அச்சப்படுகின்றோம் என மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட, முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, வாழைச்சேனை, கோழிக் கடை வீதியில் (06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில்…
