Headlines

மக்கள் காங்கிரஸ் மகளிர் விவகாரங்களுக்கான அமைப்பாளர் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, கட்சியின் மகளிர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக ஜான்ஸிராணி சலீம் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன் அவர்களால், அவருக்கான நியமனக் கடிதம் இன்று (08) வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கமையவே, கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு” –

மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் அறிவிப்பு! கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே, இம்முறை பொதுத் தேர்தலில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளதாக, மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் தெரிவித்தார். அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின் பேரில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம்…

Read More

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து – மன்னார், காக்கையன்குளத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், காக்கையன்குளத்தில் இன்று (08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், இலக்கம் 1 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன்…

Read More

இருப்புக்களுக்கான இரட்டைச் சவால்கள்!!!

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்” மற்றுமொரு சாதனையாக, இம்முறைத் தேர்தல் வியூகங்கள் அமையவுள்ளன. பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவும் பேரம்பேசலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும், தலைவர் ரிஷாட் பதியுதீன் வகுத்துள்ள திட்டங்கள், மாவட்டங்கள் தோறும் வேறுபடுகின்றன. சாத்தியமான இடங்களில் தனித்தும், சகோதர சமூகங்களின் அபிலாஷைகளை வெல்ல வேண்டிய மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்வரும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில்  பெரும் சக்தியாகத் திகழும். வடபுலத்தவரின் தேவைக்கு குரல்கொடுக்க உதயமானாலும் காலவோட்டத்தில், இத்தலைமையின் தேவை நாட்டின் நாலா திசைகளிலும்…

Read More