Headlines

‘ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்கள் அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்து, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான கருத்துக்களை சில ஊடகங்களும் தூக்கிப்பிடித்துகொண்டு காவித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான செயற்பாடுகளினால் பெரும்பான்மையின மக்கள், இந்த நாட்டில் ஆயிரம்…

Read More

சம்மாந்துறையை கௌரவப்படுத்திய மயிலுக்கு சம்மாந்துறை மக்கள் செய்யப்போகும் பிரதியுபகாரம் என்ன..? களங்கம் துடைப்பார்களா…?

சம்மாந்துறைகென்று பல தனித்துவங்களுள்ளன. அது அரசியல் ஜாம்பவான்கள் பலரை பிரசவித்த ஊர். இதிலுள்ள அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் நாகரீகமான பண்புகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மயில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தது. அன்று மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தால், அது வீ.சியுடைய ஆசனமாக இருந்திருக்கும். அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் திரட்டி சம்மாந்துறை மகனொருவனை பாராளுமன்றம் அனுப்பிவைக்க மயில் திட்டம் தீட்டியது. இது சம்மாந்துறைக்கு மயிலால் கிடைத்த பெருங் கௌரவங்களில் ஒன்றல்லவா..? இரண்டாவது…

Read More

சமகால அரசியலும் முஸ்லிம்களும்..! – கவிஞர் கால்தீன்-

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள அதி பெரும்பான்மையான கட்சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, சிறுபான்மைச் சமூகத்தின் இலட்சியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அதேபோன்று, சிறுபான்மைக் கட்சிகளின் நிலையும் பாரதூரமான ஒரு பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிடும் அபாயமும் இருக்கிறது. அதி பெரும்பான்மை தேசிய கட்சிகளில் சேர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள், சிறுபான்மைச் சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குப் புறம்பான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளனர். இப் பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து, பெரும்பான்மையினரின் எண்ணங்களுக்கு சார்பாகவே நடந்து கொண்டனர். இது வரலாறாகும். அத்தகைய பிரதிநிதிகளால் சிறுபான்மை…

Read More

சதிவலைகளை அறுத்தெறிந்து சமூகத்துக்காக வீறுநடை போடும் தலைவன்!

தனது சிறுவயது முதலே பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, அதனை எதிர்த்துப் போராடி, இன்று தமிழ் பேசும் மக்களின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்து, கல்வியிலும் சிறந்து விளங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி பிரதேசத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த ஆளுமை மிக்க ஒரு தலைவர். மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், எமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த சிறந்ததோர்…

Read More

‘கட்சிகளின் கொள்கைகள், வேட்பாளர்களின் கருத்துக்கள் மக்களிடம் தடங்கலின்றி சென்றடைய ஆணைக்குழு வழிசமைக்க வேண்டும்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவராக இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். நாட்டிலே கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடான, அநீதியான, அராஜக போக்கிலான…

Read More

இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கான கொரோனா இடர்கால கொடுப்பனவை துரிதமாக வழங்க நடவடிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படாதது தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் பிரதி…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் தெல்தோட்ட முஸ்லிம் கிராமத்தில் சுகாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கண்டி மாவட்ட, பாத்த ஹேவாஹெட்ட பிரதேசத்தின், தெல்தோட்ட முஸ்லிம் கொலனிக்கான சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு, இன்று (08) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்புச் செயலாளர் இஸ்ஸதீன் றியாஸ் மற்றும் கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் ஆகியோரது ஆலோசனையில், பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, இருபது இலட்சம்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனினால் அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஏ.எஸ்.ஏ.பாஸித்தின் பெரும் முயற்சியினால், அக்கரைப்பற்றிலுள்ள 20 விளையாட்டுக் கழகங்களுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலமே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அக்ரைப்பற்று பிரதேசத்தின் வரலாற்றில் ஒரே தடவையில் ஆகக்கூடுதலான நிதியை விளையாட்டுக் கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்து தந்த முன்னாள் அமைச்சர்…

Read More

சட்ட முதுமாணி தலைமையில் உயரிய அரசியல் கலாச்சாரத்துக்கு மக்கள் ஆணை கோருகிறது மயில்!

நாம் எம்மை ஆள்பவர்கள் தொடர்பில் அக்கரையற்றவர்களாவே இருக்கின்றோம். யார், யாரோவெல்லாம் எம்மை ஆள்கின்றனர். சற்றேனும் சிந்திப்பதில்லை. எப்படி எம் சந்ததிகள் சீரிய பாதையில் பயணிப்பது. எம் சந்ததிக்கு நேரிய அரசியல் பாதையை தான் காட்டுகிறோமா? இவைகள் பற்றி இனியாவது சிந்தித்தேயாக வேண்டும். நாம் எதிர்காலத்தில் மிகப் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளோம். எமது என்ன உரிமையில் கை வைக்கப்படும் என அறியாதவர்களாகவும், அதற்கு எப்படி காய் நகர்த்தப்படும் என்றெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையுடையவர்களாகவும் இருக்கின்றோம். அதற்கு…

Read More

‘இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்’ – பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபா கொடுப்பனவினை, அம்மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனத்தினை செலுத்தி, அதனை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றினால் நாட்டில் நிர்வாக முடக்கல் ஏற்பட்டதினால் மக்கள் பெறும்  சிரமங்களை எதிர்கொண்டனர்….

Read More

“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள்…

Read More