‘மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
சமூக இடைவெளி மற்றும் தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். கொவிட்-19 இன் உச்ச தாக்கம் இருந்தபோதும், முழுநேர ஊரடங்குச்சட்டக் காலத்திலும் ஆளுந்தரப்பு, தேர்தல்…
