Headlines

‘தேசியப்பட்டியல் பதவியை சம்மாந்துறைக்கு வழங்கி, அம்பாறை மக்களை மக்கள் காங்கிரஸ் கௌரவித்தது’ – வேட்பாளர் மாஹிர்!

சம்மாந்துறை தொகுதி இரண்டு முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற அதே சமயம், கணிசமான வாக்குகளை முஸ்லிம் காங்ரஸிற்கு மக்கள் வழங்கியிருந்த போதும், சம்மாந்துறை மக்களை கௌரவப்படுத்தும் முகமாக, ஒரு வருடமேனும் தேசியப்பட்டியல் பதவியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென மு.கா வினர் ஒரு போதும் எண்ணியதில்லை என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் சார்பில், திகாமடுல்ல மாவட்டத்தில், இலக்கம் 4 இல் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் மாகாண…

Read More

‘புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கு சிறந்த வியூகம்’ – வேட்பாளர் அலி சப்ரி ரஹீம்!

புத்தளம் மாவட்ட சிறுபான்மைச் சமூகம், கடந்த 33 வருடகாலமாக பெற்றுக்கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெறுவதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து, அதனை இல்லாமல் செய்துவிட வேண்டாம் எனவும் புத்தளம் மாவட்ட தராசு சின்ன முதலாம் இலக்க வேட்பாளர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். புத்தளம், கொத்தான்தீவு கொலணி மற்றும் றஹ்மத் நகர் பிரதேசங்களில் நேற்று இரவு (24) இடம்பெற்ற பிராசரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர்…

Read More

அரசியல் அதிகாரம் இல்லாத போதும் அம்பாறை மக்களுக்கு, மக்கள் காங்கிரஸ் பெரும் பணியாற்றியுள்ளது’ – வேட்பாளர் ஹனீபா மதனி!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளில் இரண்டை மீறிவிட்டார் எனவும், அதில் தேசிய பாதுகாப்பும் ஒன்று என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியாளார் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு  குறுகிய காலத்துக்குள் அதிகமான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். எனவே, சிறுபான்மை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே சமூக நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி கிட்டும்’ – கட்சியுடன் இணைந்துகொண்ட மாற்றுக் கட்சி மாதர் சங்கங்கள் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருதரங்கு மற்றும் வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடனான விசேட சந்திப்புக்களிலும்  கலந்துகொண்டார். அதன் ஓர் அங்கமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (23) மாவடிப்பள்ளிக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்றை, கட்சியின் மாவடிப்பள்ளி…

Read More

தன்னை நம்பிய சமூகத்திற்காக எதனையும் இழக்க துணிந்தவரே ஜவாத்…!

இன்றுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மிகவும் வேறுபட்டவர். அவரின் தோற்றம் சிங்கத்தை நேரடியாக பார்ப்பது போன்றிருக்கும். அவரின் பேச்சு சிங்கத்தின் கர்ஜனையாகவே இருக்கும். தோற்றத்திலும், பேச்சிலும் மாத்திரமல்ல வீரத்திலும் அப்படியே இருப்பார். இவரிடம் பல நல்ல பண்புகளுள்ளன. அதில் மிக முக்கியமானதே சுயநலம் பார்க்காது, நீதிக்காக எதனையும் இழக்க துணிவதுதான். மறைந்த தலைவர் அஷ்ரபோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்களில் இவரும் ஒருவர். அவரது மேடைப் பேச்சுக்கள் எப்போதும் மறைந்த தலைவரை விழித்ததாகவே இருக்கும்….

Read More

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும்” – பாலமுனையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

மாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாத்திரமின்றி, தேசிய ரீதியில் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சவால்களை முறியடிப்பதற்கும் மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை துணைபுரியுமென அதன் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, பாலமுனையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி கபூரை ஆதரித்து, மாவட்டக் குழுவின் தலைவர் சட்டத்தரணி அன்சிலின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “வரலாற்றில் இத்தனைகாலம் நமது சமூகம் எதிர்கொண்டிராத ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் இப்போது சந்திக்கின்றது. சொந்தக்காலில்…

Read More