“சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை சிறுபான்மையினம் தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயம்” – முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
சமூக அமைதியை குலைக்கக் கூடிய அரசியல் சக்திகளை தோற்கடிக்கும் வகையில், சிறுபான்மை மக்கள் தனது ஜனநாயக சக்தியான வாக்குப்பலத்தை பிரயோகிப்பதுடன், சமூகக் குரல்களாக ஒலிக்கக்கூடிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் உறுதியாக இருக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில், இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “சிறுபான்மை மக்களை குழப்பத்துக்குள்ளாக்கி, பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளை அபரிமிதமாக பெறும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள், அரசியல் களத்தில்…
