‘கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது’ – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!
இலங்கை முஸ்லிம்களின் அறிவுத் துறையின் அடையாளங்களில் ஒன்றை இழந்துவிட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். கலாநிதி எம்.ஏ.எம். ஷூக்ரி அவர்களது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கலாநிதி ஷூக்ரி அவர்கள் துறை போகக் கற்ற ஒரு தனி மனிதனாக வாழ்ந்து முடித்தவரல்லர். அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். ஆயிரக் கணக்கான மாணாக்கரை உருவாக்கியதில் பெரும்பங்கை வகித்தவர்….
