“உடல்களை அடக்கம் செய்வதையும் அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!
கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் மரணித்த உடல்களை அகற்றல்!!! பூகோளம் முழுவதிலும் கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக…
