Headlines

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வேண்டுமென்றே குற்றங்களைச் சுமத்தி, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால், அதற்கு எதிராகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர்…

Read More

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை!  

புத்தளத்தில் வாழும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களின் விபரங்கள் மற்றும் தகவல்களை உடன் அனுப்பி வைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட அரச அதிபர் சீ.ஏ. மோகன் ராஸ் மன்னார் நகரம், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். புத்தளத்தில் வாழும் இந்தக் குடும்பங்கள் மன்னாரிலோ அல்லது புத்தளத்திலோ எந்தவிதமான உதவிகளும் பெறாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், கொரோனா…

Read More

ஜனாதிபதியிடம் “10 அம்சக் கோரிக்கை” எதிர்க்கட்சிகள் வழங்கத் தீர்மானம்!

பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து, பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக பத்து அம்சக் கோரிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. கையொப்பமிடப்பட்ட பத்து அம்சக் கோரிக்கை இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டில் தற்போது…

Read More

“தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர், தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் வேண்டுகோள்!

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை…

Read More

‘ரியாஜ் பதியுதீனின் கைது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்’ – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் கண்டனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட  சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கவலை தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான கைதுகளால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read More

Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen!

Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen… My Brother Mr. Riyaj Bathiudeen was arrested by the Criminal Investigation Department while he was at his house in Puttalam on 14.04.2020 stating that he had connection with a suicide bomber with respect to Easter Sunday Attacks. Until now none of…

Read More

“சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

‘எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து, ஊடகங்கள் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தினர். எனது சகோதரரர் அநீதியாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், பழிவாங்கலுக்கு எதிராகவும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகின்றோம்’ என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,…

Read More

‘புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள்’ – பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதனால், இந்தக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகளின்றி இருக்கின்றனர். இதுவரை இவர்களுக்கான எந்தவொரு நிவாரணமோ உதவிகளோ கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மக்களுக்கு மன்னாரிலும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப்…

Read More

புல்மோட்டை பிரதேச மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு, புல்மோட்டை பிரதேசத்தில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் குடும்பங்களுக்கு மற்றும்  ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப், கிண்ணியாவைச் சேர்ந்த அஷ்ஷேய்ஹு அஸீஸ் (நளீமி) அவர்கள் தனது நண்பர் ஜிப்ரி ஹாஜியாரிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலம், கட்சியின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…

Read More

கொவிட் -19 நிவாரண நிதியத்துக்கான பங்களிப்பு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோனா (Covid -19) நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பை கடந்த மாதமுதல் நாட்டில் பல்வேறு பிரதேசங்களுக்கு செய்திருந்தார். அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் உலமா சபை மற்றும் அதனோடிணைந்த அமைப்புக்களுக்கும் கொரோனா நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பைச் செய்திருந்ததுடன், தம்மால் இயன்றளவு பல உலருணவுப் பொதிகளையும் நிவாரணங்களையும் வழங்கியிருந்தார். தற்போதைய இக்கட்டான நிலையில் இவ்விடயங்களை பகிரங்கப்படுத்த கூடாது என முடிவு செய்திருந்தோம். எனினும், சமூக…

Read More