“மீள்குடியேற்றம் மற்றும் தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை” பாராளுமன்றில் ரிஷாட்!
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட நிரந்தரமான தீர்வு முயற்சிகள் குறித்து, ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் குறிப்பிடப்படாமை வேதனையளிப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்கள் குறித்த சரத் பொன்சேகாவின் உரை கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, “ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே சொல்லப்பட்ட நல்ல விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். நானும் எனது கட்சியும்…
