Headlines

உயிரை தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாத நிலையினை பார்த்து அனுபவித்த மக்கள் நாம்  என்பதை  மறந்து விடக்கூடாது வவுனியாவில் றிப்கான் பதியுதீன் 

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு இன்று  நடைபெற்றது சுமார் 420 தேர்ந்தெடுக்கப்பட்ட மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கும் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

அம்­பாறை மாவட்­டத்தில்  யாரையும் வீழ்த்த வேண்டும் என்­ப­தற்­காக அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்சி தடம் பதிக்­க­வில்லை. இம்­மா­வட்­டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்­டிய எத்­த­னையோ விட­யங்­களைப் பெறாமல் நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவும், சமூக விடு­த­லை­யினைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் எமது கட்சி இம்­மா­வட்­டத்­திற்கு வந்­ததே தவிர யாருக்கும் தீங்கு விளை­விப்­ப­தற்­காக எமது கட்சி  இங்கு வர­வில்லை. நாம் சமூ­கத்தின் நல­னுக்­காக செயற்­ப­டு­வ­தால்தான்  இன்று எத்­த­னையோ இடங்­களில் எனக்­கெ­தி­ராக கொடும்­பா­விகள் எரிக்­கின்­றார்கள் என அகில இலங்கை…

Read More

முறைகேடான வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது!!!

கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று (01) கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றின் அடிப்படையில், அந்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள் முறை கேடான வகையில்  தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை நீல  சவர்க்காரகட்டிகளையும், 250 பார்சோப் கட்டிகளையும்,15 லீட்டர் கொள்ளளவான 3500 போத்தல்களில் அடைக்கப்பட்ட உடலுக்கு பூசுவதற்கான வாசனைத் திரவங்களையும் (Body lotion) ,  நகத்துக்கு பூசுவதற்கான 3000 கியூடெக்ஸ் …

Read More

நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மேலுமொரு  அமைச்சரவை பத்திரம்.    இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும்  உதவ வேண்டும் எனவும்பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீ ட்டுப்பிரச்சினை மற்றும்  மலசலகூடப்பிரச்சினை, குறித்த தரவுகளைசேகரித்து பட்டியலிட்டு இரண்டு வார  காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.அத்துடன் அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் மாத்திரமின்றி  ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புக்கள்,நிறுவனங்களும் இதற்கு  உதவேண்டும் என அவர்மேலும் கோரினார்.

Read More

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம்  காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.

சமுகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, அவசர அவசரமாக கூடி தீர்வை தேடுவதும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் என்ற வாடிக்கையை நாம் மாற்றி, நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவை என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்காமத்தைச் சேர்ந்த லரீப் சுலைமான் எழுதிய “திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள்” நூல் வெளியீட்டு விழாவில் (30) ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்… இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,…

Read More

றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார்-நானாட்டான் பிரதேசச் செயல பிரிவுகளில் உள்ள 33 அமைப்புக்களுக்கு பொருட்கள் கையளிப்பு!!!

நானாட்டான் பிரதேச கிராம மட்டத்தில் உள்ள 33 அமைப்புக்களுக்கு சுமார் 10 இலச்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள்  நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நானாட்டான் பிரதேசச் செயலாளரின் பிரதி நிதியாக பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது. வர்த்தக கைதொழில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த தளபாடப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முன்னால் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள்…

Read More

குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் பெரியாற்று முனை கரையோர பகுதிகளில் உள்ள பகுதிக்கு குடி நீர் இணைப்புக்களை பெறுவதற்கான குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இன்று (01) குறித்த குழாய் நீருக்கான ஆரம்ப கட்ட வேலைகளை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ஆரம்பித்து வைத்தார். மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினையை தீர்க்கும்…

Read More

சிங்கள, முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த நாட்டிலே யுத்தத்திக்குப் பிறகு ஒரு புது வடிவமான பிரச்சினைகள் தோன்றி இருக்கிறது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை துன்பத்திலும்,துயரத்திலும் ஆக்குவதக்கு திட்டமிடப்படுகின்றது என்று கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  மணிக்கூட்டுக் கோபுரம் வெள்ளிக்கிழமை (29) ம் திகது பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும்…

Read More

எனது அரசியல் பயணத்திற்கான அர்த்தத்தையும் எமது சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய அமைச்சையும் பெற்றுத்தந்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.- பிரதியமைச்சர் அபத்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு…

ஐக்கிய தேசிய கட்சியின் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய பதவியையும் அமைச்சர் றிசாட் பதியூதீன் பெற்றுத் தந்துள்ளார் என துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட…

Read More

மழை இன்மைக்கு வில்பத்து காட்டை அழித்ததுதான் காரணமென சில இனவாதிகள் கூறுவது கவலைக்குரியது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு வில்பத்து காட்டினை நான் அழித்தமையே காரணம் என்று சில இனவாதிகள் கூறுகின்றது கவலைக்குறிய விடயம் என கைத்தொழில் வணிக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற, கூட்டுறவு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட…

Read More

ஓட்டமாவடியில் மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் அமையப்பெற்ற மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (29.03.2019) இரவு ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம் பெற்றது. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும்…

Read More