Headlines

சஜித்தின் ஆட்சி காலத்தின் எனது பாராளுமன்ற கிடைப்பனவுகள் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஏழை மாணவர்களுக்கு – உறுதிமொழி அளித்தார் இஷாக் எம்.பி.

சஜித் பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் தனக்கு கிடைக்கப்பெறும் பாராளுமன்ற கிடைப்பனவுகளை அனுராதபுர மாவட்டத்தில் ஏழை குடும்பங்களில் வசிக்கும் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமை பரிசில் ஊடாக வழங்குவதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் சத்தியக்கடதாசி மூலம் உறுதிமொழி அளித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து அனுராதபுரத்தில் நடைபெற்ற “ஒன்றாய் முன்னோக்கி” மக்கள் பேரணியில் கலந்துகொண்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் குறித்த சத்திய கடதாசியினை ஜனாதிபதி…

Read More

சிறுபான்மையினருக்கு ஜனாதிபதி தேர்தல் ஒரு பலப்பரீட்சை வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் என்கிறார் அமைச்சர் றிஷாட்!

எமது சிறுபான்மை சமூகம் இந்த தேர்தலை தமது வாழ்வின் உயிர் மூச்சாக கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் நமது வாக்குகளை சமூகத்தினை பாதுகாக்கும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில் இடம்…

Read More

முரண்பட்ட பாதையில் செல்வோரும் சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டும் நுரைச்சோலையில் அமைச்சர் றிஷாட் அழைப்பு..

சிறுபான்மை சமூகத்தின் பெரும்பாலானோர் ஒன்று பட்டு, ஓரணியில் இருக்கும்போது,நம்மில் சிலர் எதிரணியில் பயணிக்காமல் சமூகத்தை முன்னிறுத்தி, எதிர்கால விமோசனத்திற்காக சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் புத்தளம் நுரைச்சோலையில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.. மக்கள் காங்கிரசின் நுரைச்சோலை அமைப்பாளர் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளில் 90சதவீதமானவை…

Read More

கோட்டா ஒருபோதுமே வெல்லமாட்டார் அக்குரணையில் அமைச்சர் றிஷாட்.

பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டா ஒருபோதுமே வெல்லமாட்டார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அக்குரணையில் இன்று (12) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் ஹலீம் ஆகியோரும் உரையாற்றினர். அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது, இனவாத,மதவாத கொள்கையோடு நாட்டை ஆளத்துடிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு பெரும்பான்மை இன…

Read More

“சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி உள்ளது” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைப்பு

இனவாதிகளின் வக்கிர புத்தியினாலும் துவேஷ நடவடிக்கையினானும் சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைத்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை ஆதரித்து தர்ஹா நகரில் நேற்று மாலை (10) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் . களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இங்கு பங்கேற்றிருந்தார். யுத்தம் ஓய்ந்ததன் பின்னர் இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது தமது கைவரிசையை காட்டத் தொடங்கினர். சுமார் 10 வருடங்களாக தொடர்ந்த…

Read More

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள் களுத்துறை, பேருவளையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை- தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார். இனவாதத்துக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் தேர்தலில் வெல்லுவதற்காக நம் மீது பரிவு காட்டுகிறார்கள். அன்பை செரிகின்றனர். அரவணைக்கின்றனர். இந்த நடிகர்களின்…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களுக்கு கருத்துரைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் அமுதினி, இணைப்பாளர் லோகநாதன், யோசுதாஸ், நாகேந்திரன் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வாக்குகளை பாழாக்காதீர்கள்- கல்முனையில் அமைச்சர் றிசாத்

இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால்  எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அதி கூடிய வாக்குகளால் இந்த பிரதேச மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள்…

Read More

பொதுஜனபெரமுன ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நிம்மதி சீர் குலையும்_பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்குமாக இருந்தால் அது முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைத்து விடும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து கிண்ணியாவில் இன்று (10) இடம் பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவராகவும் முஸ்லிம் சமூகத்தின் மதக் கடமைகள் உரிமைகளை பாதுகாக்கக்…

Read More

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்பது எமது தார்மீக கடமை நிந்தவூரில்  அமைச்சர் றிசாட்!!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்  இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் சனிக்கிழமை (9) மாலை நிந்தவூரில்…

Read More

தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித்தை வெல்லச் செய்வோம் கல்குடா கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும் சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித்தை ஆதரித்து ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றபிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ரோஹித்த போகொல்லாகம, மற்றும் முன்னாள்…

Read More

சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துவோம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.. முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உரையாற்றினார்.அவர்மேலும் கூறியதாவது, நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள்…

Read More