சஜித் பிரேமதாசவின் வவுனியா,வாழவைத்தகுளம் தேர்தல் காரியாலயத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் திறந்து வைத்தார்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் காரியாலயத்தை வவுனியா, வாழவைத்தகுளத்தில் திறந்து வைத்த போது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் காரியாலயத்தை வவுனியா, வாழவைத்தகுளத்தில் திறந்து வைத்த போது.
வெள்ளைவேன் கலாசாரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளிய கோத்தாபாய,மஹிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரம் தேவையா? என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலை பகுதியில் இன்று (03) ஞாயிற்றுக் கிழமை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெற்ற பல்வேறு மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் முப்பது வருட கால யுத்தத்தின் பின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம்…
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் காரியாலயத்தை வவுனியா, எருக்கலங்கல் பிரதேசத்தில் திறந்து வைத்த போது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது வெற்றிப் பயணத்திற்காய் இலங்கை துறை முகத்துவாரப் பகுதியில் மக்கள் கலந்துரையாடலும் பிரச்சார நடவடிக்கையும் பிரதியமைச்சரும்,மூதூர் தொகுதிக்கான புதிய ஜனநாயக முன்னணியின் அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று (02) முன்னெடுக்கப்பட்டது வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் சஜீத் பிரேமதாச தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபயவின் வெள்ளை வேன் கலாச்சாரத்தை மீண்டும் ஊடுருவச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று (02) மாலை மன்னார் தாராபுரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரிப் தலைமையில் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்களான ரவி கருனாணாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். பிரதமர் மேலும் கூறியதாவது,…
சிறுபான்மை மக்களின் அதிபெரும்பாலானோர் ஆதரிக்கும் சஜித் பிரேமதாசவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அந்த மக்களின் வாக்குகளை சஜித்துக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கான பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வாழைச்சேனையில் நேற்று(01) சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார், அவர் கூறியதாவது, அரபிகளின் வாகனமே ஒட்டகம் எனக் கூறிக்கொண்டு அரபிகளின் பணத்தை வாரி வீசி ஒருவர் களமிறங்கியுள்ளார். தான் போகுமிடம் எல்லாம் கேள்வி பதில் என்ற…
பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைத்தவர் இந்த கோட்டாபய ராஜபக்ஷ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து குருநாகல், தித்தவல்கால பகுதியில் அன்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் காலியிலே பொதுபலசேனாவின் காரியாலயத்தை திறந்து வைப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச போக இருக்கின்ற விடயம் கேள்விப்பட்ட உடனேயே முன்னாள் ஜனாதிபதியாக…
முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களது முயற்சியின் பயனாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களூடாக. முழு அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் (அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, தீகவாபி, அஷ்ரப் நகர், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும்)குடி நீர் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் 413 பயனாளிகளுக்கு கட்சி பேதமில்லாமல் அனைவருக்கும் ரூபா 75 இலட்சம் பெறுமதியான இலவச குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது…. அல்ஹம்துலில்லாஹ்!…
முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று…
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து…