தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு போலியான பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் இன்னொரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி) தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது தமக்கு கவலையளிப்பதாகவும் தன்னை மட்டுமல்ல மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களை குறிவைத்து திட்டமிட்டு இந்த தீய…
