Headlines

சூரங்கல் _ முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக பிரதியமைச்சரின் அயராத முயற்சியினால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த சூரங்கல்- முள்ளிப்பொத்தானை வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான முதல் கட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (.05) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதியானது 4கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட சுமார் 51 மில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் கீழ் இயங்கும்  வீதி அபிவிருத்தி…

Read More

அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான…

Read More

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டீர்களோ அதுபோன்று எதிர்வரும்…

Read More