Headlines

சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து அமைச்சர்களான ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

ஊடகப்பிரிவு  சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் இன்று (12) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான றிஷாத் பதியுதீன், அகில விராஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது,  இது தொடர்பில் அந்த பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு…

Read More

செமட்ட செவன வீடமைப்பு மாதிரிக் கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வு

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களின் “செமட செவன” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்துக்கான மாதிரிக் கிராமத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுவூற்றுப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது இன்று (11) சனிக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் வீட்டுத் திட்டத்துக்கான…

Read More

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள். சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை.

ஊடகப்பிரிவு குண்டுத்தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சமபவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, முஸ்லிம் என்ற பெயரைத் தாங்கி இந்த கொடிய பயங்கரவாத்தை செய்தவர்களின் பாதகச் செயலால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர். அது மாத்திரமின்றி இந்த…

Read More

நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்; ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை!

பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று இதனை செய்தவர்கள் முஸ்லிம்களாக கருதப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி, தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு ஊடகங்கள் உற்பட  சகல தரப்பினரின் ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று மாலை (09) கொள்ளுப்பிட்டி மென்டரின் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர்…

Read More

ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடாத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலை நாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில் அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவீர ஆகியோரும் இணைந்திருந்தனர். கடந்த 05ஆம், 06ஆம் திகதிகளில் ஓமானில் இடம்பெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர். இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்கள் குழு ஓமான் நாட்டில் கடந்த 05ஆம் திகதி…

Read More

நாட்டில் அமைதி சமாதானத்திற்கான பிரார்த்தனை களமாக புனித நோன்பு காலத்தை பயன்படுத்துங்கள் -இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

கண்ணியமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் அருள் நிறைந்த அற்புதமான றமழான் நம்மை வந்தடைந்திருக்கிறது. இதனை வரவேற்கும் நாம் இப்புனித நாட்களில் நல் அமல்களில் ஈடுபடுவதுடன்  நாட்டின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் சமூகத்தின் நிம்மதிக்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் பிரார்த்திக்கும் தினங்களாக பிரகடனப்படுத்துவோம். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள புனித றமழான் தினச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். படுபாதகர்களின் ஈனச்செயல்களினால் இந்த நாட்டு முஸ்லிம் சமுகம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.சுதந்திரத்திற்கு பின்னரும் முன்னரும் தேசப்பற்றாளர்களாகப் பார்க்கப்பட்ட சமூகம் சில கயவர்களினால் தேசத்துரோகிகளாகப் பார்க்கின்ற…

Read More

தங்களின் பொறுப்புகளை ஒவ்வொருவரும் சரியாக புரிந்துவைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் வெடிக்கவைக்கின்ற ஒரு பொருளாக மாற்றப்படலாம் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கணவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று மனைவி தெரிந்திருக்க வேண்டும். மனைவி எங்கிருக்கின்றாள் என்ற செய்தி கணவனுக்கு தெரிய வேண்டும். தங்களுடைய பிள்ளை என்ன செய்கின்றது என்று தாய் தந்தையருக்கு தெரிய வேண்டும். இல்லையென்றால் ஒரு முட்டாளுடைய செயலுக்காக நீங்களும் வெடிக்க வைக்கின்ற ஒரு பொருளாக எதிர்காலத்தில் மாற்றப்படலாம் என விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தையல் பயிற்சி முடித்த 144…

Read More

கர்த்தினால் மல்கம் ரங்சித் பேராயர் அவர்ளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் இராஜாங்க அமைச்சர் அமீர்அலி வேண்டுகோள்.

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயர் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும்.அதற்கான செயற்பாடுகளில் இன்றிலிருந்து நான் இறங்கப்போகின்றேன். என்று கிராமிய பொருளாதார விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட அந்தக்கொடூரமான சம்பவங்களின் பின்னர் இந்த நாட்டிலே மிகப்பெரிய இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது.அந்த நெருக்கடியான சூழலிலும் தனது மக்களின் பாரிய உயிரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு அமைதி காருங்கள் என்று…

Read More

முஸ்லிம்களின் ஒத்துழைப்பை முழுமையாக உள்வாங்குமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு, படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று   (03) ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ரிஷாத்பதியுதீன். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்துத்துரைத்தார். பள்ளிவாசல்களுக்குள்  சப்பாத்துக் கால்களால் அங்குள்ள புனித குர்ஆன் பிரதிகள்,  அரபு…

Read More

ரஞ்சனின் வீண்விமர்சனங்கள் சமூகப் புரிந்துணர்வை சீரழிக்கும்

பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், இது குறித்து பிரதமரிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளார். தொலைபேசியில் பிரதமரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்ததாவது, விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்  பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்கள் செய்த வேலைக்காக முழு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலைக்குரியது. குற்றவாளிகளைக்…

Read More

பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும் : பி .பி.சி செவ்வியில்  அமைச்சர் றிஷாட்!

கே-. கடந்த 21ம் திகதி இலங்கையில் பாரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றது இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன???  ப-. இதனை ஒரு பயங்கரவாதமாகவே நாம் பார்க்கின்றோம். இதனை சிலர் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று இஸ்லாத்துடன் இணைக்கப்பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறான  கருத்து. இஸ்லாம்  பயங்கரவாதத்தை முற்றாக தடை செய்துள்ளது. தற்கொலைத்  தாக்குதல் இஸ்லாத்தில் இல்லை. தற்கொலையாளி இஸ்லாத்தில் தண்டிக்கப்படுவார். அவருக்கு நரகம் இருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று “ஒருவரின் உயிரை காப்பாற்றுவது முழு சமுதாயத்தினதும் …

Read More