முஸ்லிம்களின் ஒத்துழைப்பை முழுமையாக உள்வாங்குமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் கோரிக்கை
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு, படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (03) ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ரிஷாத்பதியுதீன். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்துத்துரைத்தார். பள்ளிவாசல்களுக்குள் சப்பாத்துக் கால்களால் அங்குள்ள புனித குர்ஆன் பிரதிகள், அரபு…
