பயங்கர வாதத்தை துடைத்தெறிய முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கும் : பி .பி.சி செவ்வியில் அமைச்சர் றிஷாட்!
கே-. கடந்த 21ம் திகதி இலங்கையில் பாரிய பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றது இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன??? ப-. இதனை ஒரு பயங்கரவாதமாகவே நாம் பார்க்கின்றோம். இதனை சிலர் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று இஸ்லாத்துடன் இணைக்கப்பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. இஸ்லாம் பயங்கரவாதத்தை முற்றாக தடை செய்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் இஸ்லாத்தில் இல்லை. தற்கொலையாளி இஸ்லாத்தில் தண்டிக்கப்படுவார். அவருக்கு நரகம் இருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று “ஒருவரின் உயிரை காப்பாற்றுவது முழு சமுதாயத்தினதும் …
