Headlines

மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் – அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார். இதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின்…

Read More

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (07) கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் யாசீன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, பிரதேச சபை உறுப்பினர்கள் நௌபீல் , ஆதீர், சபீல், ரிபாஸ் நசீர் உட்பட பலர்…

Read More

மக்கள் காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முசர்ரப் தலைமையில் பொத்துவில் கிளையின் விசேட கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில் இடம் பெற்றது. நள்ளிரவு வரை தொடர்ந்த கூட்டத்தில், அ.இ.ம.கா பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற, முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் எதிர்வரும் தேர்தல்களை…

Read More

‘பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான கருணாரட்டன  பரணவிதான மற்றும் புத்திக  பத்திரண    அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க மற்றும் அமைச்சின் கீழ்வரும் 12…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் மீனவர்களின் நலன் கருதி புதிய திட்டம்!!!

ஒலுவில் துறை முகத்துக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் மீனவர்களுக்கு தடையாகவுள்ள இடத்தை அகழியாக வெட்டுவதற்கு உரியவர்களுக்கு உடனடியாக பணிப்புரை வழங்கினார். குறித்த நிகழ்வு (07) சனிக் கிழமை இடம் பெற்றதுடன் இலங்கை துறை முக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுலஹேவவிதாரண உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள். மீன்பிடியாளர்களுக்கு தங்களது படகுகளை கொண்டு செல்வதில் பல்வேறு தடைகளும் கஷ்டங்களும் ஏற்பட்டது மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை…

Read More

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்!!!

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்  அதிகாரத்தில் இருக்கும் வரையான காலப் பகுயியில் மோசடிகளுக்கு இடம் கொடுக்க முடியாது கிண்ணியா உப்பாறு பகுதியில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு பிழையாக வர்த்தமாணி அறிவித்தலும் செய்யப்பட்டுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா அல் அதான் மஹாவித்தியாலயத்தில் நேற்று (08) திங்கட் கிழமை பொது மக்களுக்கான காணி உறுதிப்…

Read More

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு  விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்  போலிப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான “பங்கிலாப பகிர்வு”  இன்று (08) காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை மீள உறுதிப்படுத்தினார். “நாங்கள்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு!!!

சுமார் முப்பது வருடத்திற்கு மேலாக காணப்பட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணி சீர்திருத்த   ஆணைக்குழுவுக்கு சொந்தமான  காணிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள்  வழங்குவதற்கான ஆரம்ப  நிகழ்வு இன்று திங்கட் கிழமை (08) கிண்ணியா அல் அதான் பாடசாலையில்   இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரிலும் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் தவிசாளர்…

Read More

அறுவைக்காடு குப்பை பிரச்சினை… பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் ( cleanputtalam) கிளீன் புத்தளம் அறிக்கை!!!

சுமார் 200 நாட்களைத் தாண்டி நிற்கும் புத்தளம் குப்பைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் இன்னுமோர் மைல் கல்லாக, 05-04-2019 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற #cleanputtalam, மற்றும் பிரதமருக்கு இடையிலான ( மேல்மாகாண பெருநகர் அபிவிருத்தி அமைச்சு, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உற்பட) சந்திப்பு அமைந்தது. #cleanputtalam த்தின் தொடர்ச்சியான வேண்டுகோளின் பெயரால், கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் பிரத்தியேகமான ஓர் முயற்சிக்கூடாகவே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனை வெளிப்படையாக கூறிக்கொள்வதோடு, புத்தளம்…

Read More

திருகோணமலை அஷ்ரப் துறை முகத்துக்கு துறை முக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்

குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை துறை முக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் துறை முக அதிகார சபைக்கு சொந்தமான மக்களின் குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, வேலை வாய்ப்பு, துறை முக விஸ்தரிப்பு, கைத்தொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். கப்பல் துறை…

Read More

தாதி பாடநெறிகளை பூர்த்தி செய்தோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஐவா நேர்சிங் கோம் நிறுவகத்தில் தாதிப் பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவகத்தின் தலைவரும் தேதிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான  சித்திக் நதீர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (06) திருகோணமலை விவேகானந்தா கலையரங்கில் இடம் பெற்றது. தாதிப் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்…

Read More

பாடசாலை சமூகம் அரசியல் மற்றும் இன ரீதியில் பயணிக்குமானால் எதிர்கால சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாகும் – றிப்கான் பதியுதீன்

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளுக்கான 3 மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, ஆசிரியர் விடுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு என்பன நேற்று (06) இடம்பெற்றது கைத்தொழில் வர்த்தகம்,நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,கூட்டுறவு அபிவிருத்தி,தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 5 தேசிய பாடசாலைகளுக்குள் 3 பாடசாலைகளுக்கான புதிய மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும்…

Read More