Headlines

சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை,  அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவத்தை வைத்து சில வங்குரோத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முனைகின்றனர். இஸ்லாத்துக்கு மிக நெருக்கமான மார்க்கத்தவர்களான கிறிஸ்தவ சகோதரர்கள், படு பயங்கரவாத கயவர்களால் கொல்லப்பட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அபாண்டம் சுமத்தும் இனவாத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம் – வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர்

சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சிகளில் இனவாத கருத்துக்களையும் மக்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விடையமாகும். ” கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட முற்றிலும் உண்மைக்கு புறம்பான , ஆதாரங்களும் அற்ற செய்தி தொடர்பில் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவர் என்ற வகையில் எமது மாவட்டம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மூவின மக்களோடும் சகிப்புத்தன்மையோடும் , சரியான புரிதலோடும் பேதங்கள் அற்ற முறையில் செயலாற்றுகின்ற தனித்துவமான…

Read More

பயங்கரவாத்தை எந்தச் சமூகமும் வரவேற்காது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள், அமைச்சர் றிசாத் மீது சேருபூசாதீர்கள்

பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து முன்நிறுத்தப்பட்டு அதிக பட்ச தண்டணைகள் வழங்கப்பட வேண்டும் மாறாக முஸ்லீம் சமூகம் மீதும் அமைச்சர் ரிசாத் மீதும் வீண் பழி சுமத்தி அபாண்டத்தை அள்ளிப் போட முடியாது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில்  (26) வெள்ளிக் கிழமை காலை இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…

Read More

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த…

Read More

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன: மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்  எதிர்வரும் திங்கட்கிழமை (29)ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை  திறக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். 1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை 2- தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை 3- வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிலையம் 4- இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி…

Read More

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரிஷாட்

மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில்  வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ஞாயிற்றுக் கிழமைமேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைநாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இதே வேளை இந்தகுண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்கும்மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த துயரத்தைதெரிவிக்கின்றேன். இந்த சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு எதிரானஅனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் அரசாங்கம்எடுக்க…

Read More

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

நாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில்  நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று  (21) கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது.இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன. மத உணர்வுகளையும். சிவிலியன்களின் சாதாரண…

Read More

நிம்மதி தேடும் இடங்களான ஆலயங்களில்  இடம்பெறும் காட்டு மிராண்டிதனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் #இராஜாங்க அமைச்சர் அமீர்அலி

ஆலயங்கள் புனிதமான இடங்கள் மனநிம்மதிக்காகவும் அமைதிக்காகவும் ஒன்றுகூடும்இத்தகைய புனித தலங்களில் மனித உயிர்களை வேட்டையாடும் காட்டுமிராண்டித் தனங்களை மிகவன்மையாகக்  கண்டிக்கின்றேன்.இவ்வாறு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆயுதங்களால் எதையுமே சாதிக்க முடியாது.மதத்தலங்களுக்குள் மனிதநேயமும் கருணையும் தொலைக்கப்படுவது.மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.அப்பாவிக மக்கள் கொத்துக்கொத்தாய் கொடூரமான முறையில் பலியாவதன்மூலம் கொலையாளிகள் எதனையும் அடைய முடியாது. இன்றையநாள் கத்தோலிக்க சகோதரர்களின் பண்டிகை நாள் .ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி…

Read More

விலாலோடை அணைக்கட்டு பிரச்சினைக்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தீர்வு

நீண்ட காலமாக நிலவி வரும் விலாலோடை அணைக்கட்டு தொடர்பான பிரச்சினையை ஆராயும் பொருட்டு விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எஸ்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று 20.04.2019ம் திகதி சனிக்கிழமை குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார். இவ்விஜயத்தின் போது அணைக்கட்டினை நிர்மாணிப்பதற்கான திட்டயறிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீர்ப்பாசன பொறியியளார் எம்.அஸ்ஹருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார். இதனடிப்படையில், ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையினைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. திட்டறிக்கை கிடைக்கப்பெற்றதும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான…

Read More

பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது ஒருமாத சம்பளத்தை தியாகம் செய்ய முன்வரவேண்டும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன். அதேபோல் ஜனாதிபதி உட்பட பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அன்பளிப்பு செய்ய முன்வரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் தெரிவித்தார். கம்பெரலிய செயற்றிட்டத்தினூடாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மேற்கொள்ளப்பட்ட நிதியோதுக்கீட்டின் கீழ் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலளுவெவ…

Read More

துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலவாணியை அதிகரிக்கலாம்

இலங்கை துறை முக அதிகார சபைக்கு சொந்தமாக காணப்படுகின்ற கப்பற் துறை , முத்துநகர் காணிகள் உரியவர்களுக்காக துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் வெற்றுக் காணிகளில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதன் ஊடாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய காரியாலயத்தில் இன்று (19) வெள்ளிக் கிழமை இடம்…

Read More