அமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்
(ஊடகப் பிரிவு) முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஐனரஞ்சக எழுத்தாளருமான எப்.எம்.பைரூஸின் மறைவு சத்திய எழுத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அதிர்ச்சியென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தனது அனுதாபச் செய்தியில் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளதாவது, மரணத்தின் பிடியிலிருந்து எந்த ஆத்மாக்களும் தப்பிக்க முடியாது.இறைவனின் இந்த நியதிக்கு இன்று ஆத்மார்த்த எழுத்தாளர் எப்.எம்.பைரூஸின்…
