புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான “பங்கிலாப பகிர்வு” இன்று (08) காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை மீள உறுதிப்படுத்தினார். “நாங்கள்…
