Headlines

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளை வாதுவை , மோதரமுல்லை திறந்துவைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வாதுவை, மோதரமுல்லை பிரதேசத்தில் லங்கா சதொச கிளை இன்று வியாழன் (04) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ லக்ஷ்மன் விஜேமான மற்றும் கெளரவ அதிதிகளாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், களுத்துறை…

Read More

நியூஸிலாந்து பிரதமரின் துணிகரமான செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு !  உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராய்வு!!!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நியூஸிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானியர் தூதுவர் ஜோயன்னா கெம்ப்கெர்ஸ்  வடக்கில் மீளக்குடியேறுவோரின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மாலை (04) அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா, பங்களாதேஸ் நாடுகளின் உயர்ஸ்தானியராகவும் கடமையாற்றும் இவர், நேபால் நாட்டிலும் நியூஸிலாந்துக்கான தூதுவராகவும் பணியாற்றி வருகின்றார். ”நியூஸிலாந்தில்…

Read More

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு.

தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள்  பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் இன்று (04) அறிவித்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய,நடைமுறைக்கு வரும் இந்த விலைக்குறைப்பானது  இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.                                                                               பழைய விலை.                                          புதிய  விலை. 1- உள்ளூர் சம்பா அரிசி.                                        88/=                                                                  84/= 2- சிவப்பு அரிசி                                                             59/=                                                                  57/= 3- வெள்ளைப்பச்சை அரிசி                                  70/=                                                                  67/=…

Read More

வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் :  பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டு 

கொழும்பு,  வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள்  அழிப்பதாக தினமும் மோசமான பிரசாரங்களைச் செய்து, ஊருக்கு ஊர் பாதை யாத்திரை மேற்கொண்டுவருவது மிகவும் கேவலமானது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ஏப்ரல் சீசன் வந்துவிட்டால், சில பெரும்பான்மை இன வியாபாரிகள் தமது விற்பனையை அதிகரிப்பதற்காக குறிப்பிட்ட…

Read More