Headlines

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(1) மாலை 3 மணியளவில் பாடசாலை முதல்வர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ஜே.பிறட்லி,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளரும்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன், வர்த்தக வானிப அமைச்சின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.என்.முஜீபுரகுமான்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான என்.எம்.நகுசீன் மற்றும் உவைசுல்ஹர்னி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது பாடசாலையின் பழைய…

Read More

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாத்தாண்டியஇ தும்மோதர முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது. நாம் எந்த விதமான சச்சரவுக்கும் செல்லாமல் இருந்த போதும் எங்களை…

Read More

இப்பிரதேசத்தின் தலைசிறந்த பாடசாலையாக செந்நெல் சாஹிராவை மாற்ற அனைவரும் ஒன்றினைய வேண்டும்  பாராளுன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில்

சம்மாந்துறை கல்வி வலயத்தில் தற்காலிக கொட்டில்களில் இயங்கும் வகுப்பறைகளை நிரந்தர கட்டிடங்களாக அமைத்துதருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதிமொழி வழங்கியதாக செந்நெல் சாஹிரா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் குறிப்பிட்டார். அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாடவிதானச் செயற்பாடுகளுக்கு வழங்குகின்ற முக்கியத்துவத்திற்கு அப்பால் விளையாட்டு போன்ற இனைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொண்டு சமூகம்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது….

கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று   இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு  இணைத்தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட தலைமையின் கீழ் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது. கிண்ணியா தளவைத்தியசாலையில் தற்போது நிலவி வரும் ஆளனிப் பற்றாக்குறை தொடர்பாகவும் கடந்த காலங்களில் டெங்கு நோயினால் 23 உயிர்கள் பழியாக்கப்பட்டன  இவ்வாறான விடயங்கள் இனிமேலும் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆளணி பற்றாக்…

Read More

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த கல்வி மான் மற்றும் பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுணர் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமீர் அலி பவுண்டேசனின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. அமீர் அலி பவுண்டேசனின் தலைவரும் இராஜங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி மூலமாக ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!!!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு நேற்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் ஒலி பெருக்கி சாதனங்களும் தளபாடங்களும் கையளிக்கப்பட்டன. ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கேணிநகர் மதீனா வித்தியாலயம் மற்றும் மாஞ்சோலை அல் ஹிறா வித்தியாலயம் என்பவற்றுக்கு ஒலி பெருக்கி சாதனங்களும் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்திற்கு அலுவலக தளபாடங்களும் தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது….

Read More

விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும் பிரதேச உறுப்பினருமான ஆஷிக் அவர்கள் கலந்து தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்

Read More

அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் 71 சுதந்திர நிகழ்வு பிரதமஅதிதியாக முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர்

இன நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் நிறுவுனருமான அன்பாஸ் அமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்கள் பிரதம…

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளி நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேசசபை உறுப்பினர் நளீம், கலாவெவ ஜும்மா பள்ளிக்கு பொறுப்பான மௌலவி, விஜித்தபுர பெளத்த விகாரையின் பிக்கு, இப்பொலோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, ஊர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது கலாவெவ மைய வாடிக்கு…

Read More