இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்! மார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.
வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொது மக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர் வரும் மார்ச் மதம் 25 ஆம் திகதி இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார். குறிப்பிட்ட இந்த பாதையை பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு சூழலியல் வன பாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கின்…
