Headlines

மதவாச்சி பிரதேசத்தில் விதிப்புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…..

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் இன்று மதவாச்சி பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைகளை இருந்த உள்ளக விதிகளை அவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் அபிவிருத்தி சங்க  உறுப்பினர்களும்கலந்துகொண்டனர்….

Read More

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்

தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டார்.

Read More

ஒலுவில் துறைமுகத்திற்கு துறைமுக பிரதி அமைச்சர் விஜயம்

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதிப்பில்லாத வகையில் உடனடியாகத் தீர்த்து வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விடயங்களை எத்திவைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் கண்டறியும் வகையில் நேற்று(20) மாலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு மீனவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும்…

Read More

எம்மில் ஏற்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் – இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

நாம் என்றும் ஒற்றுமைப்பட்டவர்களாக இருப்போமானால், எங்களுடைய பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு இறைவன் வாய்ப்பினைத்தருவான் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) இஷாத்தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில், ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள பள்ளிவாயல்கள்…

Read More

மாவடிச்சேனையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு வரவேற்பும் கௌரவிப்பு வைபவமும்

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் நேற்று 18.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிச்சேனை வட்டாரக்குழுவின் ஏற்பாட்டிலும் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், அல் இக்ரா விளையாட்டுக்கழகம், டோன் டச் விளையாட்டுக்கழகம், ஸைபுல்லாஹ் தற்காப்புக் கலைக்கழகம் ஆகியவற்றின் பங்குபற்றல் மற்றும் ஒத்துழைப்புடனும் வட்டாரக்குழுத்தலைவர் ஏ.எல். சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம…

Read More